முதல்வருக்கு நிரந்தர ஓய்வு: ஆதவ் அர்ஜுனா ஆரூடம்

சென்னை: ''ஓட்டுகளுக்காக பணத்தை மட்டுமே தி.மு.க., நம்பியது. ஆனால், அவர்கள் கொடுத்த பணத்தை மக்கள் துாக்கி போட்டு விட்டனர்,'' என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் தெரிவித்தார்.

சென்னை லயோலா கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து, ஆதவ் அர்ஜுனா நேற்று பார்வையிட்டார். பின் அவர் அளித்த பேட்டி:

லயோலா கல்லுாரியில், ஓட்டு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறை மிக சிறியதாக உள்ளது. சரியான முறையில் ஓட்டு எண்ணி க்கை நடக்க ஏதுவாக, இன்னும் விரிவான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின்போது, த.வெ.க.,வினர் பின்பற்ற வேண்டியவை குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் த.வெ.க., தலைவர் விஜய் ஆலோசனையில் உள்ளார் .

விஜய் ஓய்வுக்காக ஆஸ்திரேலியா செல்கிறார் என்று பரப்பப்படுகிறது. விஜய், ஆஸ்திரேலியா போகவில்லை; நிலவுக்கு போகிறார். அதற்கான ராக்கெட்டை தயார் செய்வது தி.மு.க., தான். இப்படியான புரளிகளை பரப்புவதே அவர்கள் தான்.

ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இனி நிரந்தரமாக ஓய்வு எடுக்க வேண்டியது தான். தேர்தலில், பணத்தை மட்டுமே தி.மு.க., நம்பியது. ஆனால், அவர்கள் அளித்த பணத்தை, மக்கள் துாக்கி போட்டுவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement