மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்


கோவை: வரும் ஆகஸ்ட் முதல் மேட்டுப்பாளையத்துக்கு 6 கூடுதல் ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லவும், மலை ரயிலில் பயணிக்கவும் விரும்பும் சுற்றுலாப்பயணிகள், மேட்டுப்பாளையம் வழியாக வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்வதற்கு போதிய அளவில் ரயில் வசதி இல்லை என்பது குறைபாடாக இருந்தது.

அதற்கு தீர்வு காணும் விதமாக, மத்திய அரசு கூடுதல் ரயில்களை மேட்டுப்பாளையத்துக்கு இயக்க ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அமைச்சர் எல்.முருகன் முயற்சியால் இந்த கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. புதிய ரயில் மற்றும் நீட்டிப்பு செய்யப்பட உள்ள ரயில்கள் விவரம் வருமாறு:

* மேட்டுப்பாளையம்- போத்தனுார் - பொள்ளாச்சி - ராமேஸ்வரம் (தினசரி, புதிய ரயில்)

* மேட்டுப்பாளையம் - கோவை - போத்தனுார் - சென்னை வந்தே பாரத் (வாரத்தில் புதன் தவிர மற்ற 6 நாளும்)

* மேட்டுப்பாளையம் - கோவை - போத்தனுார் - மங்களூரு (தினசரி)

* மேட்டுப்பாளையம் - கோவை - போத்தனுார் - மதுரை (தினசரி)

* மேட்டுப்பாளையம் - கோவை - போத்தனுார் - கண்ணனுார் (தினசரி)

* மேட்டுப்பாளையம் - கோவை - போத்தனுார் - மங்களூரு



ஒரு புதிய ரயில் இயக்கவும், கோவை வரும் 5 ரயில்களை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கவும் ரயில்வே நிர்வாகம் பரிந்துரை; ஆகஸ்ட் முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் தவிர, கோவை - ஷொர்ணுார் ரயில், கோவை - பாலக்காடு டவுன் ஆகிய ரயில்களையும் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கலாம் என்று ரயில்வே சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement