மக்கள் தான் என் குடும்பம்; மேற்கு வங்க பிரசாரத்தில் மோடி உருக்கம்
கொல்கட்டா: மேற்குவங்கத்தில் நேர்மையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்; மக்கள் தான் என் குடும்பம் என இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் பராக்பூரில் இறுதிகட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திர போருக்கு வலிமை அளித்த பாரக்பூர் தான் மேற்குவங்க மாற்றத்துக்கான பாதையை அமைக்கிறது. அனைவரது மத்தியிலும் வாழ்வதில் தான் நான் மகிழ்ச்சியை காண்கிறேன்; நீங்களே எனது குடும்பம்.
மேற்குவங்கத்துக்கு சேவையாற்றுவதும், காப்பாற்றுவதும் வெறும் விதியல்ல, எனது கடமை. மேற்குவங்கத்தின் ஆளுமைகளிடம் இருந்து உத்வேகம், மக்களின் அன்பை பெற்று உள்ளேன். மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் ஒரே வார்த்தை, மாற்றம் தேவை, பாஜ அரசு வேண்டும் என்பது தான்.
பதவியேற்பு விழாவுக்கு….
நேர்மையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். இதுவே மேற்குவங்கத்தில் கடைசி பிரசார நிகழ்வு. மே 4ம் தேதிக்கு பிறகு பாஜவின் பதவியேற்பு விழாவிற்கு திரும்புவேன். பாஜ ஆட்சி அமைக்கும்.
பாஜவின் பதவியேற்பு விழாவில் நான் நிச்சயம் கலந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கிறேன். அது எனது உற்சாகத்தை மேலும் அதிகரிக்கிறது. நான் ஹெலிபேடில் இருந்து இங்கு வந்துகொண்டிருந்தேன். இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள பாதை. இருபுறமும் மிகப்பெரிய கூட்டம் இருந்தது.
இரட்டை இன்ஜின் அரசு
ஆயிரக்கணக்கான மக்கள் வந்து என்னை வாழ்த்துவார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மாநிலத்தில் தொழில்துறை நடவடிக்கைகள் குறைந்துள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் அரசிடம் தெளிவான செயல் திட்டம் இல்லை. இரட்டை இன்ஜின் அரசு தேவை. மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே விரைவான வளர்ச்சி சாத்தியமாகும். திரிணமுல் காங்கிரஸின் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
@block_P@
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி அளித்த ஐந்து உத்தரவாதங்கள் பின்வருமாறு:
* காலந்தவறாத அரசு வேலை ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* தற்போதுள்ள அனைத்து அரசு வேலை காலிப் பணியிடங்களும் தாமதமின்றி நிரப்பப்படும்
.
* திறமைக்கு ஏற்ற வேலை உருவாக்கி தரப்படும்.
* மேற்கு வங்கத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் கட்டமைப்பின் கீழ் பலன்களைப் பெறுவார்கள்.
* ஜி-ராம்-ஜி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் படி கிராமங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.block_P
நாங்கள் சிவாஜி, எம்ஜிஆர் படம் பார்த்து இந்த வசனம் பல தடவை கேட்டு அலுத்து விட்டது ஜி ஏதாவது புதிதாகப் பேசுங்கள்
பிரேம் நாதா. அப்போ நீ முரசொலி படிக்கலாம்...இது உனக்கு விளங்காது...ஏறாது...
முரசொலி படித்தால் என்ன குறைந்து விட்டது . நீங்களே கட்சி பத்திரிகை தானே படித்து கொண்டு இருக்கிறீர்கள்
முரசொலி படிப்பதால் நடுவில் மூக்கை நுழைக்கவேண்டுமா,ரமேஷு
ஒருவர் படிப்பதை இழிவு படுத்தினால் மூக்கை நுழைப்பதில் எந்த தவறும் இல்லை . நீங்கள் ஒரு கட்சி பத்திரிகையை படிக்கும் பொது அதை யாரவது இழிவு படுத்தினார்களா என்பதை யோசிக்கவும்
வேண்டாம் ஜி நீங்கள் எங்கள் பிரதமர், டிரம்பின் நண்பர் , விஸ்வ குருவாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்
ஓசிகோட்டர் கொத்தடிமைகளுக்கு எப்போதுமே நைனாவை தான் புடிக்கும்
பேச்சு
மோடிஜி, நீங்க பேசுறது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பழசு மாதிரி தெரியுது.எங்க எக்ஸ் தலீவரு அந்த காலத்துலேயே இந்த மாதிரி நிறைய பேசுனாருங்க. ஆனா அதுல அவுரு என் மக்கள் என் குடும்பம் ன்னு பேசுவாரு ன்னு நாங்க புரிஞ்சிகிட்டு இருந்தோம். நீங்களும் எங்க எக்ஸ் தலீவரு பாணியில பேசுறீங்க ன்னு நினைச்சி பயந்துட்டோம். நல்ல வேளை நீங்கள் இந்திய நாட்டு மக்களை பத்திதான் பேசியிருக்கீங்க. மனசுக்கு ஆறுதலா இருக்கு.
ஜி அப்போ கோமாளி டிரம்ப், அதாணி அம்பாணி எல்லாம் யாருங்க எசமா?
மம்தா என்கின்ற ஒரு பெண் சிங்கத்தோட போட்டிபோட ஒன்றிய அரசாங்கமே அங்கே டேரா போட்டுஇருக்காங்க.. அது போதாதுன்னு சில மாநில முக்கிய மந்திரிகளும்..
பாவமா இருக்கு சீனு..இங்கே திமுகவிற்கு முட்டு கொடுத்தாய்...படுதோல்வி....இப்போது வடநாட்டு பெண்மணிக்கு முட்டு குடுகிறாய்....அசிங்கமா இருக்கு
அப்படி போடு அருவாள....மமதா வின் மமதை ஒழியட்டும். ராஹுல் கான் இஸ்லாமிய ஓட்டுக்கு தாஜா செய்யும் அரசியல் அழியட்டும். மோடி வெல்லட்டும் மேற்கு வங்கத்தில்....
மம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பங்களாதேஷில் நடந்தது மேற்கு வங்கத்திலும் நடக்கும் வாய்ப்புக்கள் மிக அதிகம். தமிழகமும், மே.வங்காளமும் தொழில்துறையில் பின்தங்கி உள்ளதை அந்தந்த மாநில நிதிநிலை அறிக்கைகளே மறைமுகமாக சொல்வதை நிபுணர்களும் மறுக்க முடியாது.
fool people.
naguu... will you kick out your father firstly.. useless
65 வயதுக்கு மேல் அரசியலில் ரெட்டையர்மெண்ட் கண்டிப்பாக வேண்டும் .
மகேந்திர நம்ம முதல்வரை சொல்கிறாயா...இருநூறு வேண்டாமா
தமிழில் எழுதி குடுத்த சீட்டையே வாசிக்க தெரியாதவரை தானே சொல்றீங்க
Arent you ashamed about your typical false propaganda at this old age? Dont try to fool people.
useless nagendhra...what is there false propoganda...மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்