இந்திய பொருட்களுக்கு இனி நியூசிலாந்தில் வரியில்லை: கையெழுத்தானது வர்த்தக ஒப்பந்தம்

2


புதுடில்லி: இந்தியா நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.


இந்தியா நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025 ம் ஆண்டு மார்ச் மாதம் பேச்சுவார்த்தை துவங்கி, 2025ம் ஆண்டு டிசம்பரில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் டாட் மெக்கிளே தலைமையிலான குழுவினர் இந்தியா வந்தனர்.

இன்று மதியம் இருநாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்கிளே ஆகியோர் கையெழுத்து போட்டனர்.


இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்துவகையான இந்திய பொருட்களுக்கும் நியூசிலாந்தில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக்கப்படும்.

நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும்மரத்துண்டுகள், வைன், அவகோடா, புளூபெர்ரி, பழங்கள் உள்ளிட்ட 895 சதவீத பொருட்களுக்கு நம் நாட்டில் வரி குறைக்கப்படும். அல்லது பூஜ்ஜியம் ஆக்கப்படும்.பல் மற்றும் பால் பொருட்களுக்கு வரிச்சலுகை கிடையாது. இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரம் நியூசிலாந்து விசா வழங்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் 1.86 லட்சம் கோடி ரூபாய் அந்திய முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement