மே 1, 2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மே 1,2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 30ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மே 1,2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாத்தா படத்தில் கூடை பிடித்துக் கொண்டு பால் வாங்கப் போகிறார் வீராப்பாய்மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்