வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

1

சென்னை: சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (ஏப்ரல் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் போன்ற காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 25), தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 1,13,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.



நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.70 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement