தண்ணீர் தொட்டியில் விழுந்த புள்ளிமான்

நத்தம்:நத்தம் அருகே அய்யாபட்டி பகுதியில் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தவித்தது.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் வந்து மானை உயிருடன் மீட்டனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மான் அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

Advertisement