நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையன் கைது
நாகப்பட்டினம்: நாகை மீனவர்களை தாக்கி, பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையனை, மீனவர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
நாகை மாவட்டம், செருதுார் மீனவ கிராமத்தில் இருந்து, ஏப்., 25ல் பைபர் படகுகளில், ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கில், 9 கடல் மைல் தொலைவில், பல பிரிவுகளாக பிரிந்து நேற்று அதிகாலை மீன் பிடித்தனர்.
அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட, 2 சிறிய படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூவர், பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான படகில் ஏறி, மீனவர்களை கொடூர ஆயுதங்களால் தாக்கினர்.
இதில், பழனிசாமி என்ற மீனவருக்கு கை எலும்பு முறிந்தது. அதேபோன்று, செருதுாரை சேர்ந்த கோபால், சதீஷ் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் இருந்த 7 மீனவர்களை தாக்கி, பொருட்களை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.
அப்போது கடற்கொள்ளையர்களின் ஒருவனை நாகை மீனவர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மற்ற இருவர், அங்கிருந்து படகில் தப்பினர். மீனவர்கள், கீழையூர் போலீசாரிடம் சிக்கிய கடற்கொள்ளையனை ஒப்படைத்தனர்.
விசாரணையில், இலங்கை, பிலாளியை சேர்ந்த அயந்தன், 27, என்பது தெரிந்தது. மேலும், போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்