தம்பதி துாக்கிட்டு தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப தகராறில், தம்பதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, தண்டேஸ்வரநல்லுாரை சேர்ந்தவர் அற்புதராஜ், 30; வெளிநாட்டில் வேலை செய்தார். இவரது மனைவி ஜெபமாலைமேரி, 27; இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.
வெளிநாட்டில் இருந்து அற்புதராஜ், சட்டசபை தேர்தலில் ஓட்டு போட சொந்த ஊர் வந்தார்.ஏப்ரல் 26 மாலை, அற்புதராஜிக்கும் ஜெபமாலைமேரிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெபமாலைமேரி, அன்று இரவு, வீடு அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்குள் சென்று, துாக்கு போட்டு தற்கொலை செய்தார். இதையறிந்த அற்புதராஜும் வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
சோழத்தரம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அருள்செல்விக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆகி இருப்பதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்