சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம்

உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விசாலாட்சியம்மன் சமேத காசி விஸ்வநாதர் தனி சன்னதியில் எழுந்தருளி வருகிறார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சுவாமி திருக்கல்யாண உற்சவம், வரும், 1ம் தேதி நடக்கிறது.

அன்று காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை, ஸ்ரீ விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 10:25 மணிக்கு, ஸ்ரீ காசி விஸ்வநாதர் உடனமர் ஸ்ரீ விசாலாட்சியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும், மாலை, 6:30 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

Advertisement