ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க தொகுதிக்கு ஒரு பார்வையாளர்; தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை: தமிழக சட்டசபை தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணும் பணியை கண்காணிக்க, தொகுதிக்கு ஒரு பார்வையாளரை நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை பணி மே 4ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்க உள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், தற்போது உள்ளூர், பட்டாலியன், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளது.
தினமும் காலை, மாலையில் ஓட்டு எண்ணும் மையத்தை கண்காணித்து, அந்தந்த கலெக்டர்கள் அறிக்கை சமர்பிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இரு தொகுதிக்கு, ஒரு பொது பார்வையாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மே, 4ல் நடக்கும் ஓட்டு எண்ணும் பணியை கண்காணிக்க, சட்டசபை தொகுதிக்கு, ஒரு பார்வையாளர் வீதம், 234 தொகுதிக்கும் பார்வையாளர்களை நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, பொது பார்வையாளர்களாக ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகள், இரு தொகுதிக்கு ஒருவர் வீதம் உள்ளனர். இந்நிலையில், ஐஆர்எஸ் அந்தஸ்திலான அதிகாரிகள், 234 பேரை, தொகுதிவாரியாக பார்வையாளர்களாக நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்