புதுச்சேரி சக்தி முருகன் கம்பெனி சார்பில் பழனி முருகன் கோவிலுக்கு பேட்டரி பஸ்
புதுச்சேரி: பழனி முருகன் கோவிலுக்கு ரூ.17 லட்சத்தில் 2-வது பேட்டரி பஸ்சை புதுச்சேரி சக்தி முருகன் கம்பெனி வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அடிவாரம், கிரி வீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக, கோவில் நிர்வாகம் தனியார் பங்களிப்புடன் கட்டணமில்லா பேட்டரி கார், மினி பஸ், பேட்டரி பஸ்கள் கிரிவீதியில் இயக்கி வருகிறது.
புதுச்சேரியை சேர்ந்த சக்திமுருகன் கம்பெனி மற்றும் தி சன்வே மேனர் ஓட்டல் சார்பில் ஏற்கனவே கடந்தாண்டு ஒரு பேட்டரி பஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அதே நிறுவனங்கள் சார்பில், 2வதாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.17 லட்சத்தில் பேட்டரி பஸ்சை வழங்கியுள்ளது.
பேட்டரி பஸ்சை ஒப்படைக்கும் நிகழ்ச்சி பாதவிநாயகர் கோவில் முன்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது கம்பெனியின் மேலாண் இயக்குனர் வேல்முருகன், செயல் இயக்குனர் குகன் ஆகியோர் கோவில் நிர்வாகத்திடம் பேட்டரி பஸ்சிற்கான சாவியை வழங்கினர். இதன்மூலம் பழனி கிரி வீதியில் கட்டணமில்லாமல் இயக்கப்படும் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் வெங்கடேசன் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும்
-
நிர்வாணமாக இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு கொலையா என விசாரணை
-
'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து யு.ஏ.இ., வெளியேறுகிறது! சவுதி உடனான விரிசல் அதிகரித்ததால் அதிரடி முடிவு
-
தலையில் கல்லை போட்டு தம்பியை கொன்ற அண்ணன்
-
அதிகாலையில் தீ விபத்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
-
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு
-
நிலம் கையகப்படுத்தும் துறை ஆவணங்கள் மாயம் விசாரணை நடத்த என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை