நிலம் கையகப்படுத்தும் துறை ஆவணங்கள் மாயம் விசாரணை நடத்த என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை
பெங்களூரு: நிலம் கையகப்படுத்துதல் துறையின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தும்படி, லோக் ஆயுக்தாவிடம், பா.ஜ., பிரமுகர் என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் லோக் ஆயுக்தா ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வரர் ராவிடம், மாநகராட்சியின் முன்னாள் ஆளுங்கட்சி தலைவரான, பா.ஜ., பிரமுகர் என்.ஆர்.ரமேஷ் நேற்று, ஜி.பி.ஏ.,வின் நிலம் கையகப்படுத்துதல் துறையின் ஆவணங்கள் மாயமானது குறித்து வி சாரிக்க கோரி மனு அளித்தார்.
பின், அவர் கூறியதாவது:
ஜி.பி.ஏ., முன்னர் மாநகராட்சியாக இருந்த போது, நிலம் கையகப்படுத்துதல் துறையின் ஆவணங்கள் மாயமாகி உள்ளன. அந்த துறையில், 20,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து உள்ளது.
இதுபற்றிய உண்மை வெளிவந்து விடும் என்ற பயத்தில், ஆவணங்களை அழித்தனரா என்று தெரியவில்லை.
இதுகுறித்து நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்று, லோக் ஆயுக்தாவில் மனு அளித்து உள்ளேன்.
அமலாக்க துறையிடமும் மனு அளிப்பேன். ஆவணங்கள் காணாமல் போனது குறித்து, அரசும் சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
அரிசி, கோதுமை, நிலக்கடலையைப் போல கடலைமாவுக்கும் எம்.ஆர்.எல்., நிர்ணயிக்க வேண்டும் *மாவு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
-
கோடையில் தண்ணீர் இன்றி தவிக்கும் கால்நடைகள்
-
கிணற்றில் இறந்து கிடந்த புலி,பன்றி வனத்துறையினர் தீவிர விசாரணை
-
காட்டுப்பன்றிகளால் வாழை மரங்கள் சேதம்
-
லாரன்ஸ் பள்ளி மாணவர்களின் குதிரை சாகசம் பார்வையாளர்கள் வியப்பு
-
97 பூத்களில், 90 சதவீதம் ஓட்டுப்பதிவு