'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து யு.ஏ.இ., வெளியேறுகிறது! சவுதி உடனான விரிசல் அதிகரித்ததால் அதிரடி முடிவு
துபாய்: சர்வதேச எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான, 'ஒபெக்' மற்றும் 'ஒபெக் பிளஸ்' அமைப்புகளில் இருந்து வரும் மே 1-ம் தேதி முதல் விலகுவதாக யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
'ஒபெக்' எனப்படும், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் மேற்காசிய நாடுகள், சில ஆப்ரிக்க நாடுகள் என, மொத்தம் 12 உறுப்பு நாடுகள் உள்ளன. சவுதி அரேபியா இந்த அமைப்பின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க நாடாக உள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை உலக அளவில், 'ஒபெக்' அமைப்பு கட்டுப்படுத்துகிறது. இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் அமைந்துள்ளது.
நேரடி போட்டி
இந்த அமைப்பில், 1967 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுப்பினராக உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டின் பொருளாதாரத்தை நவீனமயமாக்கவும், கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், 'விஷன் 2030' போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை அன்னிய முதலீடுகளுக்குத் திறந்துவிட்டார்.
சவுதி அரேபியாவுடன் வணிகம் செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் பிராந்திய தலைமையகத்தை சவுதிக்கு மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். இதன் விளைவாக, துபாயை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வந்த பல சவுதி ஊடக நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகள் சமீப காலங்களில் மீண்டும் சவுதிக்கே திரும்பத் தொடங்கியுள்ளன.
இது ஏற்கனவே அந்த பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக மையமாகத் திகழும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு நேரடி போட்டியாக அமைந்தது. இதற்கிடையே, மேற்கு ஆசிய நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி மற்றும் யு.ஏ.இ., இணைந்தே போரிட்டன.
உறவில் விரிசல்
ஆனால் சமீபத்தில் ஏமனில் தான் ஆதரிக்கும் கிளர்ச்சியாளர்களின் ஒரு பிரிவினருக்கு யு.ஏ.இ., ஆயுத கப்பலை அனுப்பியது. அதை சவுதி குண்டுவீசித் தகர்த்தது. இது போன்ற சம்பவங்கள் இரு நாடுகளின் உறவில் விரிசலை அதிகப்படுத்தின.
இது ஒருபுறம் இருக்க, சவுதி அரேபியா ஆதிக்கம் அதிகம் உள்ள 'ஒபெக்' அமைப்பு, கச்சா எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப் பாடுகள் விதிக்கிறது. இது, தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதாக யு.ஏ.இ., கருதுகிறது.
அதே போல் அமெரிக் கா கச்சா எண்ணெய் உற்பத்தியை தன் இஷ்டப்படி அதிகரிப்பதாக யு.ஏ.இ., குற்றஞ்சாட்டுகிறது. அமெரிக்காவின் இந்த அதீத உற்பத்தி காரணமாக, 'ஒபெக்' கூட்டமைப்பின் சந்தை அதிகாரம் குறைந்து வருகிறது என தெ ரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அரசியல் மற்றும் பொருளாதார காரணங் களுக்காக யு.ஏ.இ., 'ஒபெக்' கூட்டமைப்பிலிருந்து மே 1 முதல் விலகுவதாக அறிவித்துள்ளது. அதன் பின் சொந்த நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் அதிக முதலீடு செய்யவும், உலகச் சந்தையில் தங்கள் நாட்டின் நிலையை வலுப்படுத்தவும் திட் டமிட்டுள்ளனர்.
@block_B@
கச்சா எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தி, விலையை எப்போதும் உயர்ந்த அளவில் பராமரிப்பதே சவுதி அரேபியாவின் திட்டம். இதை, 'ஒபெக்' அமைப்பு மூலம் சவுதி செய்து வந்தது. தற்போது, அதில் இருந்து விலகும் யு.ஏ.இ., உற்பத்தியை அதிகரிக்கும். இது, சவுதி அரேபியாவுக்கு சவாலாக அமைவதோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையவும் வழி ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.block_B
ரொம்ப நல்ல சகுனம்
அமெரிக்கா புத்திசாலி. முஸ்லீம் நாடுகளை பிரித்து விட்டது.
இது தொடரும் ஓபேக் இனி உடையும்.
டாலருக்கு பதிலாக அந்தந்த நாடுகளின் பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும்.
வாழ்க டிரம்ப் மற்றும் நெதன்யாகு.
யுஏஇ இந்திய, இஸ்ரேல் கூட்டணியில் சேர்ந்து விட்டது.. சவூதி பாகிஸ்தானை நம்பி மோசம் போனது இனிமேல்த்தான் தெரியவரும்.மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்