மக்கள் நீதிமன்றத்தில் 6 வழக்குகளுக்கு தீர்வு
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் மக்கள் மன்றம் முகாம் நடந்தது. மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். நேற்று நடந்த மக்கள் மன்றம் முகாமில் 9 வழக்குகள் சமாதனத்திற்கு எடுக்கப்பட்டு, அதில் 6 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையர் முத்துவேல் உத்தரவு நகல்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரமேஷ், பொது செயலாளர் நாராயணக்குமார், வழக்கறிஞர்கள் குணசேகரன்,ராமன், ஜார்ஜ், சக்தி, பாலமுருகன், அய்யப்பன், கீர்த்தனா, விஷ்ணுபிரசாத், வெற்றிவேலன், அசோக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் காப்பீட்டு நிறுவன மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள், புதுச்சேரி சட்டக்கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.