கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த தோட்டக்கலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தம்
ஏற்காடு; ஏற்காடு படகு இல்ல ஏரி அருகே, மக்கள் பயன்-பாட்டிற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஜே.ஜே.எம்., திட்டத்தின் கீழ் கிணறு தோண்டப்-பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு தோட்-டக்கலை துறை வசம் உள்ள தாவரவியல் பூங்கா ஊழியர்கள், பூங்காவிற்கும், கிணற்றுக்கும் இடையே உள்ள தார் சாலையின் குறுக்கே மூன்று அடி ஆழத்திற்கு குழி தோண்டி, கிணற்றில் இருந்து பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இரவு, 8:30 மணிக்கு அங்கு வந்த எம்.ஜி.ஆர்., நகர், முருகன் நகர் மக்கள், தங்கள் பகுதிக்கு குடிநீர் வந்து, 15 நாட்களுக்கு மேலாகி விட்டது.இந்நிலையில், மக்களுக்கு தண்ணீர் வழங்காமல் பொது கிணற்றில் இருந்து, பூங்காவிற்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என கூறி வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த, ஏற்காடு ஊராட்சி மன்ற செயலர் ஜெயபாலிடமும் மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
பி.டி.ஓ.,விடம் அனுமதி வாங்கியுள்ளனர் என்று ஜெயபால் கூறியதை தொடர்ந்து, தங்கள் கிரா-மங்களில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று பல மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்-காத ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், தோட்டக்கலை துறையினர் ஒரு கடிதம் கொடுத்ததும் இரவோடு இரவாக தண்ணீர் கொடுப்பதற்காக பணிகள் நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பினர்.
சாலை குறுக்கே குழி தோண்டி அமைக்கப்பட்ட பைப் லைனை, அகற்றும் வரை அந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என கூறி போராட்-டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தோட்-டக்கலை துறையினர் பைப் லைனை அகற்றி கொண்டனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஏற்காடு பி.டி.ஓ., அருளானந்த ராஜ் கூறுகையில், ''தோட்டக்கலை துறையினர் தங்க-ளிடம் தண்ணீர் வேண்டும் என்று எழுத்துப்பூர்வ-மாக அனுமதி கேட்டிருந்தனர்.
அதை தொடர்ந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வாய் வழி மூலம் அனுமதி வழங்கப்பட்டது.
மக்கள் எதிர்ப்பால் பணிகளை நிறுத்த உத்தரவிட்-டுள்ளோம்,'' என்றார்.
மேலும்
-
நிர்வாணமாக இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு கொலையா என விசாரணை
-
'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து யு.ஏ.இ., வெளியேறுகிறது! சவுதி உடனான விரிசல் அதிகரித்ததால் அதிரடி முடிவு
-
தலையில் கல்லை போட்டு தம்பியை கொன்ற அண்ணன்
-
அதிகாலையில் தீ விபத்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
-
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு
-
நிலம் கையகப்படுத்தும் துறை ஆவணங்கள் மாயம் விசாரணை நடத்த என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை