9 சவரன் தங்கம், வெள்ளி திருட்டு :திருவள்ளூர் அருகே துணிகரம்

திருவள்ளூர்: பூட்டிய வீட்டில் 9 சவரன் தங்கம், 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திருவள்ளூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 38; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 25ம் தேதி இரவு பணிக்கு சென்றார். இவரது பெற்றோர் மூர்த்தி - வாசுகி ஆகிய இருவரும் இரவு பணிக்கு சென்று விட்டனர்.

நேற்று முன்தினம் காலை, வீட்டிற்கு வந்த வாசுகி, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 9.50 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

தகவலறிந்து வீட்டிற்கு வந்த யுவராஜ், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்த்தபோது, அதிகலை 2:30 மணிக்கு மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே வந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement