பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
தேனி, மே 3-
பெரியகுளத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பால் குளிரூட்டும் இயந்திரங்கள் பயன்பாடின்றி ஆவின் பூட்டி வைத்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
தேனி சிட்கோவில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு 1.30 லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் வசதி உள்ளது. கிராமங்களில் கொள்முதல் செய்யும் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு கொண்டு வருவதற்குள் பால் கெட்டு போவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இப் புகார்களை தவிர்க்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இரு ஆண்டுகளுக்கு முன் கோட்டூர், தங்கமாள்புரம், வாய்க்கால்பாறை, வள்ளல்நதி, மலிங்காபுரம், தர்மாபுரி, வீரபாண்டி, பெரியகுளத்தில் பால் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குளிரூட்டும் நிலையத்திலும் 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் வசதி செய்யப்பட்டது. இதில் சில மையங்கள் செயல்படுகின்றன. சில மையங்கள் இன்னும் செயல்படாமல் முடங்கி உள்ளன.
பெரியகுளம் பால் கூட்டறவு உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு தேவையான நவீன இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் வாங்கினர். அவை ஓராண்டிற்கும் மேலாக திறந்த வெளியில் கிடந்தது. இது பற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து வெயிலில் இருந்த இயந்திரங்களை உரிய அறைக்குள் மாற்றி வைத்தனர். ஆனால், ஓராண்டாகியும் பால் குளிரூட்டு நிலையமும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பல ரூபாய் லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பயன்பாடின்றி வீணாக உள்ளது.
விரைவில் பால் கெட்டுப்போக வாய்ப்பு பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட எ.புதுப்பட்டி, எண்டபுளி, சில்வார்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் பால் நீண்ட நேரத்திற்கு பின் தேனி குளிரூட்டு நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். சில நேரம் பால் கெட்டு விட்டது என திருப்பி அனுப்புகின்றனர். கோடை காலம் என்பதால் பால் விரைவில் கெட்டுப்போகிறது. நீண்ட நேரத்திற்கு பிறகு குளிரூட்டு நிலையம் கொண்டு செல்வதால் பால் அடர்த்தி குறைந்து ஊக்கத்தொகை கிடைப்பதில்லை. இப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பெரியகுளத்தில் பால் குளிரூட்டும் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆவின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்