ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்

2

வாஷிங்டன்: ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஈரானியர்களால் கச்சா எண்ணெயிலிருந்து எந்த வருமானமும் பார்க்க முடியவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.



வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானின் ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. ட்ரோன் தொழிற்சாலைகள் 82 சதவீதம் செயலிழந்துள்ளன. ஈரான் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாய் இருக்கிறது. பேச்சு வார்த்தைகளின் தற்போதைய உண்மையான நிலவரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.


ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஈரானியர்களால் கச்சா எண்ணெயிலிருந்து எந்த வருமானமும் பார்க்க முடியவில்லை. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்க முடியாது. போராட்டம் நடத்தியதற்காக, ஆயுதம் ஏந்தாத 42,000 அப்பாவி மக்களை அவர்கள் கொன்றிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் சொல்லும் எண்ணிக்கை அதைவிட மிக அதிகம். ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Advertisement