நிறுவன செய்திகள்
உரிமம் பெற்ற 'மொபிக்விக்'
பி ன்டெக் நிறுவனமான ஒன் மொபிக்விக் சிஸ்டம்ஸ், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கி சாரா நிதி நிறுவனத்துக்கான உரிமத்தை பெற்றுள்ளது. இதையடுத்து, 'மொபிக்விக் பைனான்சியல் சர்வீசஸ்' என்ற துணை நிறுவனத்தை அது துவக்க உள்ளது. இதன் வாயிலாக, மூன்றாம் தரப்பு நிறுவனங்களை சாராமல், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மொபிக்விக் நேரடியாக கடன் வழங்க முடியும்.
சன் பார்மாவிடம் 'ஆர்கனான்'
இ ந்தியாவின் சன் பார்மா நிறுவனம், அமெரிக்காவின் 'ஆர்கனான்' நிறுவனத்தை கிட்டத்தட்ட 1.10 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, உலகின் டாப் 25 மருந்து நிறுவனங்களின் பட்டியலில் சன் பார்மா நுழைகிறது. பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ தயாரிப்புகள் மற்றும் பயோசிமிலர்ஸ் துறையில் சன் பார்மா சர்வதேச அளவில் ஒரு வலுவான இடத்தை பிடிக்க இந்த ஒப்பந்தம் உதவும்.
'ஆக்சிஸ் பேங்க்' ஆட்குறைப்பு
2025 - 26ம் நிதி ஆண்டில், ஆக்சிஸ் வங்கி தனது பணியாளர்களின் எண்ணிக்கையில் 3,100க்கும் மேல் குறைத்துள்ளது. தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, வேலைத்திறன் அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று வங்கி தெரிவித்துள்ளது. ஆட்குறைப்பு இருந்தாலும், வங்கி கிட்டத்தட்ட 400 புதிய கிளைகளை தொடங்கி உள்ளதும், ஏ.ஐ., போன்ற தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஜம்முவில் 'எவரெடி' நிறுவனம்
எ வரெடி இண்டஸ்ட்ரீஸ் குழுமம், ஜம்முவில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஆல்கலைன் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையை துவங்கியுள்ளது. நாட்டின் ஒரே ஆல்கலைன் ஆலை இதுவாகும். ஆண்டுக்கு 36 கோடி பேட்டரிகளை இத்தொழிற்சாலை தயாரிக்கும். இதன் வாயிலாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் விமான சேவைக்கு அனுமதி
நா ட்டின் முதல் நீர் விமான சேவையை துவங்க, 'ஸ்கை ஹாப் ஏவியேஷன்' நிறுவனம் சான்றிதழ் பெற்றுள்ளது. இவ்வகை விமானங்கள், ஆறு, ஏரிகளிலும் தரையிறங்கவும் மேலே எழும்பி பறக்கவும் திறன் படைத்தவை. நீரில் மிதக்கும் வகையில் சக்கர பகுதியில் மிதவைகள் இதில் இடம்பெறும். இந்நிறுவனம், முதல் கட்டமாக லட்ச தீவுகளில் உள்ள 5 தீவுகளுக்கு சேவையை துவங்கும். வழக்கமான விமான சேவையை இயக்க முடியாத பகுதிகளுக்கு கடல் விமான சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
விற்பனைக்கு வரும் பிரிட்டன் நிறுவனம்
பி ரிட்டனை சேர்ந்த ஆக்டிஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்திய துணை நிறுவனமான புளூபைன் எனர்ஜி விற்பனை செய்யப்பட உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான புளூபைன், 4 ஜிகாவாட் உற்பத்தித் திறனுடன் உள்ளது. இந்நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்த ஆலோசனை வழங்க ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி நியமிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 18,600 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
-
இறுதிச்சடங்கு ஊர்வலத்தை முறைப்படுத்த சட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
17 வயது சிறுமியை கடத்தினாரா முஸ்லிம் வாலிபர்? கிருஷ்ணகிரியில் மீண்டும் 'லவ் ஜிகாத்' புகார்
-
அரசு அகற்றிய முருகன் சிலை; மீண்டும் நிறுவ ஐகோர்ட் உத்தரவு