வர்த்தக ஒப்பந்தம்: நியூசிலாந்தில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள்
புதுடில்லி : இந்தியா, நியூசிலாந்து இடையே இருதரப்பு வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் நோக்கில் எப்.டி.ஏ., எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஒப்பந்தத்தின் விபரங்கள்:
இந்த ஒப்பந்தம், சரக்கு வர்த்தகம், சேவைகள், சுங்க நடைமுறைகள், வர்த்தக எளிதாக்கம், சுகாதார மற்றும் தர நெறிமுறைகள், தகராறு தீர்வு உள்ளிட்ட 20 அத்தியாயங்களை உள்ளடக்கியது.
இந்தியாவின் பலன்கள்
* ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், தோல் பொருட்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய பொருட்களுக்கும் நியூசிலாந்து சந்தையில் 0% சுங்கவரி
* 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1.88 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு உறுதி
* தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் அதிக வாய்ப்பு
* திறமையான இந்தியர்களுக்கு 5,000 விசா ஒதுக்கீடு - 3 ஆண்டுகள் வரை வேலைவாய்ப்பு
* இந்திய மது ஏற்று மதிக்கு சுங்கவரி விலக்கு
நியூசிலாந்தின் பலன்கள்
* இந்தியாவில் 70% பொருட்களுக்கு சந்தை அணுகல்
* ஆடு இறைச்சி, மரப்பொருட்கள், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களுக்கு உடனடி சுங்கவரி விலக்கு
* ஆப்பிள், கிவி, தேன் போன்ற விவசாய பொருட்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட சலுகைகள்
* சில கடல் உணவுகளுக்கு 7 ஆண்டுகளில் முழு சுங்கவரி நீக்கம்
பாதுகாப்பு பிரிவுகள்
இந்தியா, விவசாயிகள் மற்றும் குறு, சிறு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், பால், காய்கறி, சர்க்கரை, செம்பு, அலு மினியம் உள்ளிட்ட பல துறைகளில் சுங்கவரி சலுகைகளை வழங்கவில்லை.
@block_G@
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள், பரஸ்பரம் பரிமாறும் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்கவரிகளை குறைப்பது அல்லது நீக்குவது, வர்த்தகம் மற்றும் முதலீட் டுக்கு தடையாக இருக்கும் கட்டுப்பாடுகளையும் தளர்த்த ஒப்புக்கொள்வது ஆகியவற்றுக்கான ஒப்பந்தம்.block_G
நல்ல தொடக்கம். புதிய வாய்ப்புகள் உருவாகட்டும்
சிறப்பு.மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
-
இறுதிச்சடங்கு ஊர்வலத்தை முறைப்படுத்த சட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
17 வயது சிறுமியை கடத்தினாரா முஸ்லிம் வாலிபர்? கிருஷ்ணகிரியில் மீண்டும் 'லவ் ஜிகாத்' புகார்
-
அரசு அகற்றிய முருகன் சிலை; மீண்டும் நிறுவ ஐகோர்ட் உத்தரவு