உண்மையான பக்தி உயர்வு தரும்; கவனம் பெற்ற சிபிஆர், சச்சின் செயல்
நமது நிருபர்
ஆந்திரா பல்கலை., பட்டமளிப்பு விழா மேடையில் சிபிஆர் மற்றும் சச்சின் செய்த செயல் பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள பல்கலையில் நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிபி ராதாகிருஷ்ணன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வெங்கடாஜலபதி சிலையை நினைவுப் பரிசாக முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கி கவுரவித்தார்.
அப்போது சிலைக்கு மரியாதை அளிக்கும் வகையில், தனது காலணியை கழற்றிவிட்ட பிறகே சிபிஆர் பெற்றுக்கொண்டார். அதேபோல் சச்சின் டெண்டுல்கரும் உடனடியாக தனது காலணியை கழற்றிவிட்டு முதல்வர் சந்திரபாபுவிடம் சாமி சிலையை பெற்றுக்கொண்டார்.
உயர்ந்த நிலைக்கு சென்றாலும் கடவுள் மீதான இருவரின் பக்தி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த பக்தி தான் இருவரையும் உயர்ந்த இடத்தில் அமர்த்தியுள்ளது உள்ளது என்று நேரில் கண்டவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிகழ்வின் வீடியோவை பல்வேறு தரப்பினர் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
Rathna - Connecticut,இந்தியா
28 ஏப்,2026 - 17:28 Report Abuse
சிறந்த பண்பு பிரதமரை போல.. 0
0
Reply
renga rajan - ,இந்தியா
28 ஏப்,2026 - 16:19 Report Abuse
வாழ்க வளமுடன் 0
0
Reply
மேலும்
-
நிர்வாணமாக இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு கொலையா என விசாரணை
-
'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து யு.ஏ.இ., வெளியேறுகிறது! சவுதி உடனான விரிசல் அதிகரித்ததால் அதிரடி முடிவு
-
தலையில் கல்லை போட்டு தம்பியை கொன்ற அண்ணன்
-
அதிகாலையில் தீ விபத்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
-
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு
-
நிலம் கையகப்படுத்தும் துறை ஆவணங்கள் மாயம் விசாரணை நடத்த என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை
Advertisement
Advertisement