பனை தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு; ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
மதுரை: பனை தொழிலாளி மீது எஸ்.ஐ., இசக்கி ராஜா துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் குறித்து சப் கலெக்டர் விசாரணையை முடித்து ஜூன் 2ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மருதம்புத்துாரில், கடந்த ஏப்., 8ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன், சட்டவிரோதமாக கள் இறக்கியதாகவும், தகவலறிந்து சோதனைக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ., துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
மகன் மீது எஸ்.ஐ., இசக்கி ராஜா துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி தந்தை பெருமாள் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 28) நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.
அப்போது, தென்காசி சப்- கலெக்டர் வைஷ்ணவி பால் ஆஜராகி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார். பிறகு, ''சப் கலெக்டர் விசாரணையை முடித்து ஜூன் 2ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும்
-
நிர்வாணமாக இளம்பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு கொலையா என விசாரணை
-
'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து யு.ஏ.இ., வெளியேறுகிறது! சவுதி உடனான விரிசல் அதிகரித்ததால் அதிரடி முடிவு
-
தலையில் கல்லை போட்டு தம்பியை கொன்ற அண்ணன்
-
அதிகாலையில் தீ விபத்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
-
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு
-
நிலம் கையகப்படுத்தும் துறை ஆவணங்கள் மாயம் விசாரணை நடத்த என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை