இயற்கை உரங்களை பயன்படுத்தி செடி அவரை சாகுபடி
செடி அவரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏ.ஜெ. நடராஜன் கூறியதாவது:
இயற்கை உரங்களை பயன்படுத்தி, பாத்தி முறையில் செடி அவரை சாகுபடி செய்துள்ளேன். இது, 45 நாட்களுக்கு பின் அறுவடைக்கு வருகிறது. ஒவ்வொரு முறை காய் அறுவடைக்கு பின் மேல் உரமாக, வேம்பு, புங்கன், ஆமணக்கு, கடலை, இலுப்பை ஆகிய புண்ணாக்கு கலவை மேல் உரமாக பயன்படுத்தி சாகுபடி செய்துள்ளேன்.
பூச்சிகளை விரட்டுவதற்கு சூடோமோனாஸ் உள்ளிட்ட உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறேன்.
ரசாயன உரங்கள் இன்றி செடி அவரை விளைவிப்பதால், அவரைக்காயின் சுவை மற்றும் அடியுரங்களின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
– ஏ.ஜெ. நடராஜன்,
99439 06332.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதையில் 4வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு
-
திருநீர்மலை குட்டையை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டிய மாநகராட்சி * அரசிடம் விளக்கம் கேட்டது ஐகோர்ட்
-
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் சித்திரை பிரம்மோத்சவம் தொடக்கம்
-
ரேபிஸ் தொற்று: பெண் சாவு
-
திருமண வரவேற்பில் தகராறு ஒரு தரப்பினர் சாலை மறியல் கிளயனுார் அருகே பரபரப்பு
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
Advertisement
Advertisement