திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் சித்திரை பிரம்மோத்சவம் தொடக்கம்
மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை பகுதியில், ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, அங்குரார்ப்பணம் வழிபாடு நடந்தது.
அதைத் தொடர்ந்து மகாமண்டபத்தில், உத்சவர் நித்ய கல்யாண பெருமாள், தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின், நேற்று காலை கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோத்சவ விழா தொடங்கியது. அன்று மாலை



வரும் 5ம் தேதி, கருட வாகன சேவை, 7ம் தேதி தேர் திருவிழா, 10ம் தேதி, தெப்போத்சவத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவடைகிறது.
குழிப்பாந்தண்டலத்தில், மங்களாம்பிகை உடனுறை நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவிலில், சித்திரை பவுர்ணமியை ஒட்டி பாலாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதேபோல்,
மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சுவாமிகளின் சித்திரை பவுர்ணமி விழா, விமரிசையாக நடந்தது.
பின், யாகம் வளர்த்து, மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இங்கிலாந்து டெஸ்ட்: சான்ட்னர் விலகல்
-
ஆசிய ஐஸ் ஹாக்கி: இந்தியா வெற்றி
-
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனதைபே: தாமஸ் பாட்மின்டன் காலிறுதியில்
-
ராஜஸ்தானில் நகை வியாபாரி தற்கொலை: சென்னை மாநகர போலீசாருக்கு சிக்கல்
-
டென்னிஸ்: அரையிறுதியில் மனாஸ்
-
கால்நடை மருத்துவர்கள் களப்பணிக்கு முன் அனுமதி பெறும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
Advertisement
Advertisement