போதையில் 4வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே, மது போதையில் 4வது மாடியில் நின்று மொபைல் போன் பேசியவர், நிலைத்தடுமாறி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர், 30; சுங்குவார்சத்திரம் அருகே, மொளச்சூரில் வாடகைக்கு தங்கி, பிள்ளைப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தினார்.

பின், கைப்பிடி அருகே நின்று மொபைல்போன் பேசும்போது, நிலைத்தடுமாறி மாடியில் இருந்து விழுந்தார். இதில், கீழே இருந்த ஜன்னல் சிலாப் மீது தலை பலமாக மோதியது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement