ரேபிஸ் தொற்று: பெண் சாவு

வானுார்: வானுார் அருகே ரேபிஸ் தொற்றால் பாதித்த பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வானுார் அடுத்த திருவக்கரை மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல். பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி நித்யா, 28; இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த 25ம் தேதி நித்யாவிற்கு, திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டது.

உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடலில் ரேபிஸ் தொற்று பரவி இருப்பதும், நோய் தீவிரமடைந்து இருப்பதும் தெரிய வந்தது. இதனால் அங்கேயே நித்யா தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேபிஸ் தொற்றால் பெண் இருந்திருப்பதால் அவரது குடும்பத்தினர் அனைவரையும் நோய் தடுப்பூசி போடும் படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement