திருநீர்மலை குட்டையை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டிய மாநகராட்சி * அரசிடம் விளக்கம் கேட்டது ஐகோர்ட்
சென்னை:சென்னையை அடுத்த திருநீர்மலையில், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குவாரி குட்டையை நிரப்பி, தாம்பரம் மாநகராட்சி கட்டியுள்ள வணிக வளாகங்கள், கழிப்பறைகளை அப்புறப்படுத்தக் கோரிய மனுவிற்கு, தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருநீர்மலை, திருமங்கையாழ்வார்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில், 100 ஆண்டுகளாக குவாரி குட்டை ஒன்று உள்ளது. தாம்பரம் மாநகராட்சி, இந்த குட்டையை மண், கட்டட இடிபாடுகளை கொட்டி நிரப்பி, ஐந்து வணிக வளாகங்களையும், பொது கழிப்பறைகளையும் கட்டி உள்ளது.
மழை காலங்களில், வெள்ளப் பெருக்கை தடுக்க உதவும் நீர்நிலையை ஆக்கிரமித்ததால், மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும், அங்கு கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீர்நிலையை நிரப்பி கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், கழிப்பறைகளை அப்புறப்படுத்த கோரி, மார்ச் 20ல் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குவாரி குட்டையை நிரப்பி, கட்டப்பட்ட வணிக வளாகம் செயல்படவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு, மனுவிற்கு தமிழக வருவாய் துறை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்