கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்.

கள்ளக்குறிச்சி ஸ்ரீபூமி நீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா உற்சவம் நடந்து வருகிறது. 6ம் நாள் உற்சவத்தில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 8ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவமும், வரும் மே 1ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

Advertisement