மூதாட்டி பாலியல் பலாத்காரம் :புளியந்தோப்பு நபர் கைது

புளியந்தோப்பு: வீடு புகுந்து, மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி, தனியாக வசித்து வருகிறார். இவரது நான்கு மகன்கள் மற்றும் மகள், வீட்டின் அருகே வசித்து வருகின்றனர்.

ஏப்ரல் 27 ஆம் தேதி மாலை, மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற அவரது மகள் கீதா, அவரை குளிப்பாட்டும்போது மூதாட்டியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விசாரித்தபோது, வீடு புகுந்த மர்ம நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரிய வந்தது. இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசாரின் விசாரணையில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மருதப்பன், 56 என்பவர், பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவரை ஏப்ரல் 28 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட மூதாட்டி, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Advertisement