ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ஆய்வு 

கடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் பார்வையிட்டார்.

கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை மையமான கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கோபுரம் மற்றும் 'சிசிடிவி' கேமரா மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குறிஞ்சிப்பாடி அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் ஏப்ரல் 27 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை 'சிசிடிவி' கேமரா வழியாக பார்வையிட்டார். முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி உடனிருந்தார்.

Advertisement