தாமஸ் கோப்பை பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
ஹோர்சென்ஸ்: தாமஸ் கோப்பை பாட்மின்டன் லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என, சீனாவிடம் தோல்வியடைந்தது.
டென்மார்க்கில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை 'ஏ' பிரிவு லீக் சுற்றில் கனடா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.
ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் 19-21, 21-8, 12-21 என, சீனாவின் ஷி பெங் லீயிடம் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 13-21, 21-13, 24-26 என, சீனாவின் வெய் கெங் லியாங், சாங் வாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-13, 21-15 என, சீனாவின் ஹாங் யாங் வெங்கை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 17-21, 13-21 என, சீனாவின் ஜியாங் யு ரென், ஜி டிங் ஹீ ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஒற்றையர் பிரிவு 3வது போட்டியில் இந்தியாவின் பிரனாய் 20-22, 21-19, 21-11 என, சீனாவின் குவாங் சூ லுாவை வீழ்த்தி, ஆறுதல் வெற்றி தேடித்தந்தார். முடிவில் இந்திய அணி 2-3 என தோல்வியடைந்தது.
மேலும்
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
-
ஹார்முஸ் ஜலசந்தி பெயரை மாற்றணும்; தனது பெயரை சூட்ட சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போருக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு; கணக்கு சொல்கிறது பென்டகன்
-
கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; பிரிட்டன் மன்னரிடம் வலியுறுத்தும் மம்தானி
-
அமெரிக்காவில் உலகின் சிறந்த ராணுவம் இருக்கிறது; அதிபர் டிரம்ப் பெருமிதம்