வடமாநில வாலிபர் தற்கொலை காதல் விவகாரம் காரணமா?

சேலம்: உத்தரபிரதேசம், பரம்சிங்பூரை சேர்ந்தவர் தரண்ஜெய், 21. சமீ-பத்தில் சேலம் வந்து கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதி பணியா-ளர்களுடன், அறை எடுத்து தங்கி இருந்தார்.


நேற்று முன்தினம் இரவு அறைக்கு சென்ற தரண்ஜெய், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம-டைந்த மற்ற பணியாளர்கள், கதவை தட்டியும் சத்தமில்லை. உடனே கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தரண்ஜெய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.விசாரணையில் நேற்று முன்தினம் இரவு மொபைல் போனில் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனால் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement