பாரதிதாசன் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: காஞ்சிமாமுனிவர் நிறுவனத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன தமிழ்த்துறையின் சார்பில், பாரதிதாசன் பிறந்த நாள் விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் பாரதிதாசன் உருவப் படத்துக்கு மலர்துாவி, மரியாதை செலுத்தினார். பாரதிதாசன் கவிதைகள் குறித்தும், பாரதிதாசனின் பணிகள் குறித்தும், மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.

தமிழ்த்துறைத் தலைவர் இளங்கோவன் பாரதிதாசனின் தமிழ்ப்பற்று, எழுத்துப்பணி, திரைத்துறைப் பணி, தமிழிசைப் பணி முதலியவற்றை நினைவுகூர்ந்து, புதுச்சேரியின் தமிழ் அடையாளமாகப் பாரதிதாசன் விளங்குவதாக பட்டியலிட்டார்.

நிகழ்ச்சியில், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், சுஜாதா, வேல்கார்த்திகேயன் கலந்துகொண்டனர்.

பிற துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் பாரதிதாசன் படத்துக்கு மலர்துாவி, மரியாதை செலுத்தினர்.

Advertisement