பஸ்சில் மொபைல் பறித்தவர் 'வளைப்பு'

சேலம்: சேலம், சூரமங்கலம், சுந்தரம் காலனியை சேர்ந்தவர் தமிழரசன், 29. இவர் நேற்று புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஜங்ஷன் செல்லும் பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். ஜங்ஷன் அருகே பஸ் நிற்கும்போது, அருகே அமர்ந்திருந்த ஒருவர், தமிழரசன் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டு, பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார்.

தமிழரசன் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள், திருடிய வாலிபரை சுற்றிவளைத்தனர். பின் அவரை, பள்ளப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், முருங்கப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார், 27, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement