மரத்தில் இருந்து செப்டிக் டேங்கில் விழுந்த பெண் சாவு

சேலம்: சேலம், அம்மாபேட்டை நெசவாளர் காலனியை சேர்ந்த கந்த-சாமி மகள் புவனா, 49. திருமணம் ஆகாத நிலையில் பெற்றோ-ருடன் வசித்தார். நேற்று வீடு அருகே உள்ள முருங்கை மரத்தில் ஏறி கீரை பறிக்க முயன்றார். அப்போது தவறி, அங்குள்ள செப்டிக் டேங்க் மீது விழுந்தார்.


அதில், 'ஸ்லாப்' உடைந்து, செப்டிக் டேங்கினுள் விழுந்தார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. அவர்கள் தகவல்படி, விரைந்து வந்த, செவ்வாய்ப்பேட்டை தீய-ணைப்பு வீரர்கள், புவனாவை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அம்மாபேட்டை போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement