கும்பாபிேஷகத்தை முன்னிட்டு பூங்கரகம், தீர்த்தக்குட ஊர்வலம்
மேட்டூர்: மேட்டூர், குள்ளவீரன்பட்டியில் சக்தி விநாயகர், அக்னி மாரியம்மன், சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை, 8:30 முதல், 10:15 மணிக்குள் நடக்கிறது.
இதை முன்னிட்டு நேற்று காலை, 9:00 மணிக்கு திரளான பக்தர்கள் மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து பூங்கரகம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் தானியம் நிரப்பி வைத்தல், அபிேஷகம், சிறப்பு அன்னதானம் நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு மூலவர் கோவில் விமானத்துக்கு கும்பாபி ேஷகம், தொடர்ந்து விநாயகர், மாரியம்மன், காளியம்மன், பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement