தட்சசீலா மருத்துவ கல்லுாரியில் மலேரியா தின விழிப்புணர்வு   

திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள தட்சசீலா மருத்துவ கல்லுாரியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஓங்கூர் கிராமத்திலுள்ள தட்சசீலா மருத்துவ கல்லுாரியில் உலக மலேரியா தினம் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

 மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுடர், மாவட்ட சுகாதார பூச்சியியல் வல்லுநர் சிவசங்கர், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், செந்தில்குமார், விஜயசாந்தி  மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement