கள்ளழகர் விழாவில் பக்தர்கள் மீது காலணி வீசினால் கைது

மதுரை: 'மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் மீது காலணிகளை வீசுவது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் சுந்தரவடிவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு:

அநாகரிகமான செயல்கள் கண்டிக்கத்தக்கவை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது, பக்தர்கள் மீது காலணிகளை வீசுவது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து கைது செய்ய போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திலிருந்து நகர் பகுதியில், 7 கி.மீ.,க்கு அதிரடிப்படை போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement