சுற்றுலா தலங்களுக்கு லாரிகளில் செல்லும் மேலுார் கரும்பு
திருப்புவனம்: தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சுற்றுலா தலங்களில் விற்பனை செய்வதற்காக கரும்புகள் மேலுாரில் இருந்து திருப்புவனம் வழியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளது.
மேலுார் அருகே கீழையூர், சருகுவலையப்பட்டி, எட்டிமங்கலம் , சென்னகரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கணக்கிட்டும் மற்ற நாட்களிலும் கரும்பு விற்பனை செய்வதற்கு வசதியாக பயிரிடுகின்றனர். மேலுாரில் இருந்து சுற்றுலா தலங்களான நாகர்கோவில், கன்னியாகுமரி, திற்பரப்பு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் கரும்பு அனுப்பப்படுகின்றன.
15 கரும்பு கொண்ட ஒரு கட்டு அதிகபட்சமாக 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாட்களில் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். ஒரு லாரியில் அதிகபட்சமாக 300 கட்டுகள் வரை ஏற்றுகின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், மேலுார் பகுதிகளில் செங்கரும்பு எனப்படும் கரும்பு அதிகம் விளைவிக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை சீசன் தவிர கோடை காலங்களில் கரும்பு அதிகம் விற்பனையாகும், விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி சென்று சுற்றுலா தலங்களில் சிறு வியாபாரிகளிடம் ஒரு கட்டு 350 ரூபாய் என விற்பனை செய்கிறோம்.
மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு