கீழடியில் மீண்டும் சாய கிண்ணங்கள்
கீழடி: கீழடியில் நடந்து வரும் 11ம் கட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு 2024 ஜூன் 1ல் தொடங்கி, 2025 ஜூலை வரை நடந்தது. 11ம் கட்ட அகழாய்வு கஜேந்திரன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் மார்ச் 18 முதல் நடந்து வருகிறது. இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் 26ல் முதலில் தோண்டப்பட்ட இரு குழிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது கூடுதலாக தோண்டப்பட்ட குழிகளிலும் ஏராளமான சாய கிண்ணங்கள் அருகருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சாய கிண்ணங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் சரிந்த நிலையில் கிடைத்துள்ளது. இதுவரை பத்திற்கும் மேற்பட்ட சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த அகழாய்வில் ஒரு சில சாய கிண்ணங்கள் ஆங்காங்கே கிடைத்தன. 11ம் கட்ட அகழாய்வில் அடுக்கி வைக்கப்பட்ட சாய கிண்ணங்கள் சரிந்த நிலையில் கிடைத்துள்ளன. செங்கல் கட்டுமானத்தின் உட்புறம் கிடைத்திருப்பதால் கீழடியில் தொழிற்சாலை செயல்பட்டிருக்க வேண்டும், காலப்போக்கில் அவைகள் மண்ணில் புதைந்திருக்க வேண்டும் என கருதப் படுகிறது.
மேலும்
-
குதிரை பேரத்திற்கு வழிவகுத்த கிரிஷ் ஷோடங்கரின் முந்திரிக்கொட்டை பேச்சு
-
காற்றுடன் மழை: மரங்கள் முறிந்தன
-
நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழா
-
தபால் ஓட்டுக்கள் எண்ணும் பெட்டி தயாரிப்பு தீவிரம்
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களை சங்கடங்களுக்கு ஆட்படுத்த கூடாது கலெக்டர் சரவணன் அறிவுரை
-
தேர்தல் வெற்றியை உறுதியாக நம்புவது ஏன்? நண்பர்களிடம் பகிர்ந்த பழனிசாமி