தனியார் ஊழியர் வீட்டில் 3.5 பவுன் நகை திருட்டு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சாந்தபுரம் பகுதியில் உள்ள திருமலா ரெசிடென்சி பகுதியில் வசிப்பவர் கோகுலகி-ருஷ்ணன் மனைவி அன்னலட்சுமி, 30. டைட்டன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தன் குடும்பத்துடன் கோவை மாவட்டத்திற்கு கடந்த, 22ம் தேதி இரவு, 10:00 மணிக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் மொட்டை மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை பவுன் நகையை திருடி சென்றனர்.
கடந்த, 27ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய அன்னலட்சுமி, நகை திருட்டு போனது கண்டு அதிர்ச்சிய-டைந்தார்.


இது தொடர்பாக, நல்லுார் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள, 'சிசிடிவி' கேம-ராவில் மர்ம நபர்கள் வந்து சென்றது பதிவாகியுள்ளதா
என பார்த்து, விசாரித்து
வருகின்றனர்.

Advertisement