காற்றுடன் மழை: மரங்கள் முறிந்தன

சாணார்பட்டி: சாணார்பட்டி, கோபால்பட்டி சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை 5:00 மணிக்கு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததில் மரங்கள் முறிந்தன.

இதில் சாலையோர வீட்டில் குடியிருந்த தேங்காய் தொழிலாளி சேகர் குடிசை வீட்டின் கூரை காற்றில் பறந்து சென்று அருகில் இருந்த சாலையில் விழுந்தது.

வீட்டில் இருந்த சேகர் உட்பட 6 பேர் உயிர் தப்பினர். சேகரின் தாயார் மருதாயி காயமடைந்தார். விலக்குரோட்டில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.

மேலும் விலக்கு ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சில வீடுகள் சேதமடைந்தன.மேலும் அய்யாபட்டி மேட்டுப்பட்டி,கன்னியாபுரம், வேம்பார்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பங்கள், தென்னைமரங்கள் முறிந்து விழுந்தன.

மேட்டுப்பட்டியில் சாலையோர மரம் முறிந்து விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement