நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழா

நத்தம்: உலுப்பகுடியில் மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழா ஏப்.23 ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தோரணமரம் ஊன்றுதல்,ஏப்.29 இரவு தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக வந்த அம்மன் மேளதாளம் முழங்க கோயில் முன்பு உள்ள மந்தைக்கு சென்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பூத்தட்டு, மாவிளக்கு ஏந்தி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாலையில் வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.

Advertisement