தபால் ஓட்டுக்கள் எண்ணும் பெட்டி தயாரிப்பு தீவிரம்

திண்டுக்கல்: அண்ணா பல்கலை ஓட்டு எண்ணும் மையத்திற்கு தபால் ஓட்டுக்களை எண்ணி பிரித்து வைப்பதற்காக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.

மின்னணு ஓட்டுக்கள் எண்ணுவதற்கு முன் தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை எண்ணும் பணிகள் துவங்கும். இதற்கான பெட்டிகள் தயார் செய்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.மேலும் பெட்டிகள் கூடுதலாக தேவைப்பட இதற்கான பெட்டிகளை தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். இதன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்ட இயக்குனர் சதீஸ்குமார் கூறியதாவது: மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் 15,118 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. 500 தபால் ஓட்டுக்கள் ஒரு மேஜைக்கு என பிரித்து எண்ணப்பட உள்ளன. ஏழு தொகுதிகளில் பதிவான தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்களை சின்னங்கள் வாரியாக பிரித்து வைக்கும் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஓட்டு எண்ணும் மையத்தின் வளாகத்தில் நடந்து வருகிறது என்றார்.

Advertisement