குதிரை பேரத்திற்கு வழிவகுத்த கிரிஷ் ஷோடங்கரின் முந்திரிக்கொட்டை பேச்சு

1

- நமது நிருபர் -

'ஆட்சி இல்லையென்றால், எதிர்க்கட்சியாக செயல்படுவோம்' என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் கூறியது, வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்களிடம், தி.மு.க., குதிரை பேரம் நடத்த வழி வகுத்துள்ளது' என, தமிழக காங்கிரசார் புலம்புகின்றனர்.

இது குறித்து, காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், தி.மு.க., கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்டு, காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர், ஆட்சியில் பங்கு வேண்டும் என வெளிப்படையாகவே பேசினர்.

ஆனால், 'ஆட்சியில் பங்கு தர முடியாது' என தி.மு.க., திட்டவட்டமாக அறிவித்தது. சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஆட்சியில் பங்கு கோரிக்கையை மீண்டும் காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் டில்லியில் ஷோடங்கர் அளித்த பேட்டியில், 'தமிழகத்தில் இனி காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும்; நடுநிலை இல்லை' என்றார்.

'ஆட்சியில் பங்கு தந்தால், தி.மு.க., அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம்; இல்லையென்றால் கடந்த முறை போல் அமைதியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக செயல்படுவோம்' என மிரட்டும் வகையில் கிரீஷ் ஷோடங்கரின் பேச்சு அமைந்துள்ளது.

வரும் 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானதும், தி.மு.க., பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும் சரி; காங்கிரஸ் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தாலும் சரி; ஆட்சியில் பங்கு தர வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதில் டில்லி மேலிடம் உறுதியாக உள்ளது.

இதற்கிடையில் கிரீஷ் ஷோடங்கரின் பேச்சு, தி.மு.க.,வை உஷார்படுத்தியுள்ளது. அதாவது, காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., தயாராகி வருகிறது.

காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில், தி.மு.க., தான் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்துள்ளது. அந்த நன்றி விசுவாசத்தை காண்பிக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தயங்க மாட்டார்கள்.

தேர்தல் முடிவு வருவதற்கு முன், கிரீஷ் ஷோடங்கர் அவசரப்பட்டு கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_B@

ஒப்பந்தம் எதுவும் கிடையாது!



கிரீஷ் ஷோடங்கர் பேச்சு குறித்து, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: தமிழக காங்கிரசை 'வாட்ச்' செய்யத் தான் கிரீஷ் ஷோடங்கர் தமிழகத்திற்கு வந்துள்ளார். கட்சியை அவர் 'வாட்ச்' செய்ய வேண்டுமே தவிர, வாட்ச்மேனாகி விடக்கூடாது. ஆட்சியில் பங்கு குறித்து ராகுல், கார்கே, செல்வப்பெருந்தகை போன்றோர் கேட்கலாம். பங்கு தருவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுக்கு முன், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தலுக்கு முன் கூட்டணி ஒப்பந்தத்திலும், ஆட்சியில் பங்கு தொடர்பாக எந்த கையெழுத்தும் போடப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.block_B
@block_G@

தேர்தல் முடிவுகளுக்கு பின் பேசலாம்: செல்வப்பெருந்தகை


சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், தொழிலாளர் தின நினைவு சின்னத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''வெளியானது கருத்து கணிப்பு அல்ல; கருத்து திணிப்பு. தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை கிரீஷ் ஷோடங்கர் கூறியது குறித்து, தேர்தல் முடிவுகளுக்கு பின் பேசிக் கொள்ளலாம்,'' என்றார்.block_G

Advertisement