வழக்குப்பதிய ரூ.1,500 லஞ்சம்: எஸ்.எஸ்.ஐ.,க்கு '2 ஆண்டு'

2

திருச்சி: திருட்டு தொடர்பாக வழக்கு பதிய, 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ.,க்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பெரம்பலுாரை சேர்ந்த மணிமாறன், 61, என்பவர், திருச்சி சிங்காரத்தோப்பில் தையற்கடை வைத்திருந்தார். உடல்நலக்குறைவால், கடையை சில நாட்கள் பூட்டி வைத்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு நடந்தது.

கடந்த, 2009 ஜூலை, 7ல் திருச்சி மாநகர கோட்டை குற்றப்பிரிவு போலீசில், மணிமாறன் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ., முத்துக்குமார், வழக்கு பதிய, 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். மணிமாறன், திருச்சி ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, எஸ்.எஸ்.ஐ., முத்துக்குமார், லஞ்சம் வாங்கிய போது கைதானார்.

திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், முத்துக்குமாருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி புவியரசு நேற்று உத்தரவிட்டார்.

Advertisement