தவெக தலைவர் விஜய் ஆலோசனை முதல் குஜராத் vs பெங்களூரு அணி மோதல் வரை; இன்று (ஏப் 30) முக்கிய நிகழ்வுகள்!

1

நமது நிருபர்




தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (ஏப்ரல் 30) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?


அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 1.00 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தவெக வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.



* நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று (ஏப்.30) முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


* கிரிக்கெட் லீக் தொடரின் 42வது போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஆமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கிறது.


* திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு மின்சார ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை அடையும். திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.15 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1.45 மணிக்கு விழுப்புரம் அடையும்.

Advertisement