தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு
தேவதானப்பட்டி: தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மஞ்சளாறு அணையிலிருந்து நேற்று வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யாததால் அணை அதன் முழு கொள்ளளவு (55 அடி) எட்டவில்லை. இதனால் உபரி நீர் திறக்கவில்லை. பத்து மாதங்களுக்கும் அதிகமாக உபரி நீர் செல்லாததால், மஞ்சளாறு ஆற்றுப்பகுதி வறண்டது. இதனால் அவ்வப்போது குடிநீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர்மட்டம் பாதித்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மஞ்சளாறு கரையோரப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு உருவாகி உள்ளது.
தமிழக அரசு உத்தரவில், நேற்று முதல் மே 3 வரை நான்கு நாட்களுக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் மஞ்சளறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் நேற்றைய நீர்மட்டம் 41.40அடி.
உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மேற்பார்வையில் தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால் தேனி மாவட்ட பகுதியான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதியான தும்மலப்பட்டி மற்றும் வத்தலக்குண்டு முதல் சிவஞானபுரம் வரையில் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். மஞ்சளாற்றில் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோரம் மக்கள் ஆற்றில் இறங்குவது, குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் மம்தா கட்சி வேட்பாளர்கள் தர்ணா; தேர்தல் ஆணையம் சொல்வது இதுதான்
-
தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது
-
புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரானுக்கு கச்சா எண்ணெயில் வருமானம் இல்லை; அதிபர் டிரம்ப்
-
பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு