மூணாறில் கண்ணாடி' வாட்ச் டவர்' சுற்றுலா பயணிகள் வரவேற்பு

மூணாறு: மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி 'வாட்ச் டவர்' சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

கொச்சி- - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் பழைய அரசு கல்லூரி அருகே மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி கழகம் சார்பில் தாவரவியல் பூங்கா உள்ளது. அங்கு தனியார் ஒத்துழைப்புடன் ரூ. 3.60 கோடி செலவில் கண்ணாடி ' வாட்ச் டவர்' அமைக்கப்பட்டு ஏப். 19ல் பயன்பாட்டுக்கு வந்தது.

34 மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடி நடை பாலத்தில் சென்று தரையில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட ' வாட்ச் டவரில்' இருந்து இயற்கையான சுற்றுச் சூழலை ரசிக்கலாம். ஒரே நேரத்தில் வாட்ச் டவரில் 30 பேர் செல்லலாம்.

இந்த கண்ணாடி வாட்ச் டவர் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த பத்து நாட்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண்ணாடி வாட்ச் டவருக்கு சென்றனர்.

நபர் ஒன்றுக்கு ரூ.250, சிறுவர்களுக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கின்றனர்.

Advertisement